துறையூர்: நல்லியம்பாளையம் கைலாச நாயகி உடனுறை கைலாசநாதர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது
துறையூர் அருகே உள்ள நல்லியம்பாளையத்தில் கைலாச நாயகி உடனுறை கைலாசநாதர் ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் இன்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. சுவாமிக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் அக்கினி வேல்வியில் வேத மந்திரங்கள் முழங்க காப்பு கட்டப்பட்டு பின்னர் மாலை மாற்றி பக்தர்கள் வழிபட்ட திருமாங்கல்யத்தை கைலாசநாதர் கைலாச நாயகிக்கு மாங்கல்யதானம் செய்தார் .