தண்டராம்பட்டு: திருவண்ணாமலை: ஆடு திருடிய மர்ம நபர்கள் மடக்கி பிடிப்பு - பொதுமக்கள் விசாரணை
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென் கரும்பலூரில் கடந்த சில மாதங்களாக ஆடுகளை திருடி வந்த மர்ம நபர்களை, ஆயுதங்களுடன் அப்பகுதி இளைஞர்கள் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் மற்றும் எடைத்தட்டு உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.