மகளை பார்க்கச் சென்ற சினிமா துணை நடிகை மீது தாக்குதல்? | விழுப்புரத்தில் போலீசில் பரபரப்பு புகார்
விழுப்புரம் அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சினிமா துணை நடிகை பிரேமப்பிரியா (46), தனது மகளை பார்க்கச் சென்றபோது தாக்கப்பட்டதாகவும், மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தனது மகள் பவானிக்கும், விழுப்புரம் குழந்தைவேல் நகரைச் சேர்ந்த பிரவீன்ராஜாவுக்கும் கடந்த ஆகஸ்டு 24-ந் தேதி திருமணம் நடைபெற்றதாகவும், திருமணத்துக்கு பிறகு மகள் தன்னிடம் பேசவில்லை என்றும் பிரேமப்பிரியா தெரிவித்துள்ளார்.
மகளிடம் பேசுவதற்காக பிரவீன்ராஜா வீட்டிற்கு சென்றபோது, அவரது குடும்பத்தினர் மகளை பார்க்க விடாமல் தடுத்ததாகவும், நகை தொடர்பாக கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி கீழே தள்ளியதாகவும் அவர் புகாரில் கூறியுள்ளார்.
இதில் தனது கண் கண்ணாடி உடைந்து வலது கண்ணில் காயம் ஏற்பட்டதாகவும், மீண்டும் அந்தப் பகுதிக்கு வந்தால் வெட்டிக் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் பிரேமப்பிரியா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பிரவீன்ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது மகளிடம் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் போலீசில் கோரிக்கை விடுத்துள்ளார்.
புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
TN32NEWS – விழுப்புரம் மாவட்ட செய்திகளை உடனுக்குடன்!
#TN32NEWS #விழுப்புரம் #Villupuram #போலீஸ்புகார் #CrimeNews #TamilNews #VillupuramNews #சினிமாதுணைநடிகை #BreakingNews #PoliceComplaint