துறையூர்: காளிப்பட்டியில் தனது மனைவி, இரு குழந்தைகளைக் காணவில்லை என டிரைவர் காவல் நிலையத்தில் புகார்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே காளிப்பட்டியைச் சேர்ந்தவர் டிரைவர் பாலகுமார். இவருக்கு திருமணமாகி பிரியா என்கிற மனைவியும், ஜெய்ஹிந்த், சர்வேஷ் என்கிற இரு மகன்களும் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலகுமார் வழக்கம்போல் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மாயமானது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பாலகுமார் துறையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.