துறையூர்: MLA அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் 27 நபர்களுக்கு மோட்டார் சைக்கிள் வாகனங்களை ஸ்டாலின்குமார் MLA வழங்கினார்
துறையூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் மதிப்பிலான 17 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 10 மூன்று சக்கர வாகனங்கள் பயனாளிகளுக்கு வழங்கினார். அம்மாபட்டி, கீழகுண்டுபட்டி, சிங்களாந்தபுரம், காளிப்பட்டி, சிக்கதம்பூர், நாகலாபுரம் பகுதிகளை சேர்ந்த 27 பயனாளிகள் பயனடைந்தனர்.