துறையூர்: பேருந்து நிலையத்தில் நடிகை குஷ்புவை கண்டித்து திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம் - குஷ்புவின் கொடும்பாவியை பறித்து சென்ற போலீசார்
துறையூர் பேருந்து நிலையம் முன்பு திமுக மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கிருபா ரவி தலைமையில், நடிகை குஷ்புவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நடிகை குஷ்பூ இழிவாக பேசியதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, குஷ்பூவின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது, போலீசார் அதனை பறித்து சென்றனர்.