துறையூர்: துறையூர் பைபாசில் பெரம்பலூர் - ஆத்தூர் சாலையை இணைக்கும் பைபாஸ் சாலைக்கு பூமிபூஜை - அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு
துறையூர் - பெரம்பலூர் பைபாஸ் சாலையில் இருந்து ஆத்தூர் சாலையை இணைக்கும் 5.6 கி.மீ தொலைவிலான புதிய பைபாஸ் சாலை ₹45 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நிகழ்வில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று பூமிபூஜை நிகழ்வை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், எம்எல்ஏ ஸ்டாலின் குமார், சேர்மன் தர்மன் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.