விழுப்புரம் மகாராஜபுரத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடக்கம்! – லட்சுமணன் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
விழுப்புரம்:
விழுப்புரம் மகாராஜபுரம் கிழக்கு பாண்டி ரோட்டில் நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக இருந்த சாலையைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, தற்போது அப்பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், சாலைப் பணிகளின் தரம் மற்றும் பணிகள் நடைபெறும் விதம் குறித்து கேட்டறிந்தார். நீண்ட நாள் கோரிக்கையைத் தொடர்ந்து சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
TN32NEWS | விழுப்புரம் மாவட்ட செய்திகள்