மயிலம் தொகுதி மக்களின் கோரிக்கைகள்! ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மானை சந்தித்து சி.வி.சண்முகம் வலியுறுத்தல்!
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மானை முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மயிலம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கடந்த 3 மாதங்களாக மயிலம் தொகுதியின் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களிடம் பெற்ற கோரிக்கை மனுக்கள் குறித்து ஆட்சியரிடம் எடுத்துரைத்தார்.
குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், புதிய நியாயவிலைக் கடைகள், சேதமடைந்த சாலைகளைச் சீரமைத்தல், அங்கன்வாடி மையங்கள், முதியோர் ஓய்வூதியம், விவசாயிகளுக்கான தானியக் களங்கள், பள்ளிக் கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார்.
பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்ததாக சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகள் உடனுக்குடன் அறிய TN32NEWS சேனலை Subscribe செய்யுங்கள்.
#CVShanmugam #Mayilam #VillupuramNews #TamilNews