விழுப்புரம் அருகே பிரிட்ஜ் வெடித்த விபத்து – சிறுவனைத் தொடர்ந்து தந்தையும் உயிரிழப்பு!**
ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து இரண்டு உயிரிழப்புகள் – நிவாரணம் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் உறவினர்கள் மனு!**
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே வீரசோழபுரத்தில் கடந்த 7-ஆம் தேதி ஏற்பட்ட பிரிட்ஜ் வெடிப்பு விபத்தில் வீடு இடிந்து தரைமட்டமானது.
இந்த விபத்தில் சிறுவன் பத்ரிநாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது தந்தையும் ஊர்க்காவல் படை வீரருமான மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், மூர்த்தியின் மனைவி ஈஸ்வரி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், குடும்பத்தின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும், இலவசமாக புதிய வீடு கட்டித்தர வேண்டும் என்றும் வலியுறுத்தி மூர்த்தியின் தாயார் மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நிவாரணம் வழங்குவதற்கான கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இலவச வீடு கட்டித்தர உரிய ஆணை வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
தந்தையையும் மகனையும் இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்கி வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.**
📍 விழுப்புரம் மாவட்டச் செய்திகள் உடனுக்குடன் அறிய **TN32NEWS** பக்கத்தைப் பின்தொடருங்கள்.
#TN32NEWS #Villupuram #Veerachozhapuram #Kandachipuram #VillupuramNews #விழுப்புரம் #வீரசோழபுரம் #பிரிட்ஜ்விபத்து #மின்கசிவு #அரசுநிவாரணம் #மாவட்டஆட்சியர்