
விழுப்புரத்தில் இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு – 18 கடைகளுக்கு ரூ.1.20 லட்சம் அபராதம்; 150 கிலோ இனிப்புகள் பறிமுதல்!
விழுப்புரம்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், விழுப்புரம் நகரில் உள்ள இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது உணவுப் பொருட்களின் தரம், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, சுகாதார நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத 18 கடைகளுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 150 கிலோ இனிப்புப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தீபாவளி பண்டிகை காலத்தில் பொதுமக்கள் தரமான இனிப்பு மற்றும் கார வகைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும், உணவுப் பொருட்களின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகளை சரிபார்த்து வாங்க வேண்டும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
#Villupuram #FoodSafety #Diwali2026 #TN32NEWS #FoodInspection #விழுப்புரம் #தீபாவளி #உணவுபாதுகாப்புத்துறை