
விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்! சிறப்பாகப் பணியாற்றிய காவலர்களுக்கு எஸ்.பி. மதிவாணன் சான்றிதழ் வழங்கிப் பாராட்டு!
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. இளமுருகன், துணை காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், அரசு வழக்குரைஞர்கள் மற்றும் மாவட்ட மருத்துவ அலுவலக அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்டத்தில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள், குற்றங்களின் பின்னணிகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், வழக்குகளின் விசாரணை மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் தொடர்பாக அரசு வழக்குரைஞர்கள் மற்றும் அரசு மருத்துவ அலுவலர்களின் கருத்துகளும் கேட்டறியப்பட்டன.
தொடர்ந்து, தமிழக அரசால் திருத்தியமைக்கப்பட்ட காவலர் சேமநல நிதி, மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் காவல் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய நிரந்தர வைப்பு நிதி தொடர்பாக விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதத்தில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் முதல் காவலர்கள் வரை தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் சிறப்பான பணியைப் பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். மதிவாணன் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.
மாவட்டத்தில் குற்றங்களைத் தடுப்பதற்கும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும் காவல்துறையினரின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் இக்கூட்டம் நடைபெற்றது.#TN32NEWS #Villupuram #VillupuramPolice #SPMadhivanan #PoliceMeeting #CrimeReview #TamilNews #விழுப்புரம் #விழுப்புரம்காவல்துறை