வாணியம்பாடி: கணவாய்புதூரில் நிலத்தில் பணி செய்ய மறுத்த தூய்மை பணியாளர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டிய கவுன்சிலரின் கணவர்- வீடியோ வைரல்
வாணியம்பாடி அடுத்த கணவாய்புதூர் பகுதியில் தன்னுடைய நிலத்தில் பணி செய்ய மறுத்த தூய்மை பணியாளர்களை இரண்டாவது வார்டு உறுப்பினர் மாசிலம்மாலின் கணவர் சிவலிங்கம் ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் இன்று இரவு வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.