வாணியம்பாடி: சென்னாம்பேட்டை சின்னாற்றில் சலவைத் தொழிலாளிகளின் கட்டிடத்தை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சலவை தொழிலாளர்கள்
வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதியில் கட்டியுள்ள சலவை தொழிலாளிகளின் கட்டிடத்தை பொதுப்பணித்துறையினர் அகற்ற வந்துள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த சலவை தொழிலாளர்கள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் வருவாய்த்துறையினர், காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதின் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.