வாணியம்பாடி: நியுடவுன் பைபாஸ் சாலையில் ஆந்திராவி்லிருந்து கடத்தி வரப்பட்ட ₹7 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல்
ஆந்திராவிலிருந்து செம்மரக்கட்டைகள் கடத்தி வந்த காரை வாணியம்பாடி நகர காவல் துறையினர் வாணியம்பாடி நியூடவுன் பைபாஸ் சாலையில் இன்று மாலை சுற்றி வளைத்து பிடித்தனர்.காரில் செம்மரக் கட்டைகளை கடத்தி வந்த வெங்கடேசன் என்ற இளைஞரை கைது செய்து காரில் இருந்த ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 300 கிலோ எடையுள்ள 8 செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல் செய்து வாணியம்பாடி காவல்துறையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.