மோகனூர்: நாமக்கல்: மோகனூரில் 177 பேருக்கு ரூ.61.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் பரளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், 177 பயனாளிகளுக்கு 61.90 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வழங்கினார். அரசு திட்டங்கள் குறித்த விளக்கக் கண்காட்சியும் இதில் இடம்பெற்றது.