Public App Logo
# சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு – விழுப்புரம் அருகே சோகம் விழுப்புரம் அருகே **சிந்தாமணி பகுதியை சேர்ந்த நண்பர்களான அருண் மற்றும் நரேஷ்** ஆகிய இருவர், முத்தாம்பாளையம் அருகே தேநீர் அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த கனரக லாரி இருசக்கர வாகனம் மீது மோதியதில், இருவரும் பலத்த காயமடைந்து **சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.** தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாலுகா போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களாக தேநீர் அருந்தச் சென்ற இருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #TN32NEWS #விழுப்புரம் #சிந்தாமணி #Villupuram #RoadAccident #TruckAccident #TamilNaduNews #BreakingNews - Viluppuram News