#விழுப்புரத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது 10 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்#
விழுப்புரம் அருகே சிந்தாமணி பகுதியில் ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர் மாதேஸ்வரன் மற்றும் உதவியாளர் மனோஜ்குமார் ஆகியோரை, இருசக்கர வாகனத்தில் வந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல் வழிவிடுவது தொடர்பான தகராறில் தாக்கியதாக கூறப்படுகிறது.
🪨 நடுரோட்டில் கற்களால் தாக்கப்பட்டதில் இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை கண்டித்து தனியார் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை நிறுத்தி **சாலை மறியலில் ஈடுபட்டனர்.**
இதனால் திருச்சி–சென்னை புறவழிச்சாலையில் சுமார் **1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு** ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டு போக்குவரத்து சீரானது.
📹 **தற்போது ஓட்டுநர் தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.**
⚠️ இதேபோல், ஒரு மாதத்திற்கு முன்பு இருவேல்பட்டு பகுதியில் தனியார் பேருந்து ஓட்டுநர் 3 பேரால் தாக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
**தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுமா?**
#விழுப்புரம் #Villupuram #PrivateBus #BusDriver #CCTV #RoadRokko #Traffic #VillupuramNews #TN32NEWS #TN32News