மோகனூர்: நாமக்கல்: மின்வெட்டை கண்டித்து திருச்சி சாலையில் பொதுமக்கள் திடீர் மறியல்
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியில் அடிக்கடி நிகழும் மின்தடையால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நாமக்கல்-திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.