துறையூர்: வைரிசெட்டிபாளையம் ஜம்பேரியில் மீன் பிடி திருவிழா
திருச்சி மாவட்டம் வைரிசெட்டிபாளையம் ஜம்பேரியில் ஞாயிற்றுக்கிழமை காலை மீன் பிடி திருவிழா நடைபெற்றது. சுமார் 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் கடந்த மூன்று வருடங்களாக நீர் நிரம்பி இருந்தது. இந்நிலையில் தற்போது தண்ணீர் வற்றியதின் காரணமாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை மீன்பிடி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த திருவிழாவில் வைரிசெட்டிபாளையம் அக்கிரமத்தை சுற்றியுள்ள கோட்டப்பாளையம், வலையபட்டி, உப்பிலியபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்களைப் பிடித்து சென்றனர்.