துறையூர்: துறையூர் அருகே கரட்டூரில் பகுதி நேர ரேஷன் கடையை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் திறந்து வைத்தார்
துறையூர் ஒன்றியம் கோட்டையூர் ஊராட்சியில் கரட்டூரில் 138 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க 3 கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய சூழல் இருந்தது இப்பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர் இவர்களது கோரிக்கையை ஏற்று கரட்டூரில் பகுதி நேர ரேஷன் கடையை எம்எல்ஏ திறந்து வைத்தார் இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி தலைவர் ஒன்றிய செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்