துறையூர்: கொப்பம்பட்டியில் சிலிண்டர் வெடித்து நான்கு பேர் காயம். தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
துறையூர் அருகே கொப்பம்பட்டியை சேர்ந்தவர் நோபில். இவர் மின்வாரியத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டில் இருந்து கரும்புகை வந்துள்ளது. அருகில் உள்ள ராமராஜ் விஜய் கார்த்திக் மற்றும் நோபில் ஆகிய நால்வரும் தண்ணீர் விட்டு தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்துள்ளது. இதில் தீயை அணைக்க முயன்ற நால்வரும் காயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்த உப்பிலியபுரம் தீயணைப்பு நிலையத்தினர் தீயை அணைத்தனர்.