துறையூர்: நாகலாபுரம் கிராமத்தில் லாரியின் அடியில் படுத்து உறங்கிய சிறுவன் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் அச்சிறுவன் பலி
திருச்சி மாவட்டம் நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவரது தோட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உடையான் குப்பம் பகுதியைச் சேர்ந்த சக்திவேலும் அவரது மனைவி அம்சவேனியும் கூலிக்கு கரும்பு வெட்டும் வேலை செய்ய வந்துள்ளனர். அப்போது தம்பதியின் 6 வயது மகன் கவின் கரும்பு லோடு ஏற்ற வந்த லாரியின் அடியில் படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது. குழந்தை தூங்குவதைக் கவனிக்காத ஓட்டுநர் லாரியை இயக்கியதால் வாகனம் ஏறி சிறுவன் உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.