கோவை வேளாண் கல்லூரி மாணவி மர்ம மரணம்! விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை முடக்கி உறவினர்கள் அதிரடி மறியல்!
கோவை வேளாண் கல்லூரியில் படித்து வந்த விக்கிரவாண்டி மேலக்கொந்தை கிராமத்தைச் சேர்ந்த மாணவி தரனிக்கா, இரு தினங்களுக்கு முன்பு கல்லூரி விடுதி கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
மாணவியின் மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்கக் கோரியும், கல்லூரி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த திடீர் சாலை மறியல் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி காவல் நிலைய போலீசார், மறியலில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
#News32 #VikravandiNews