துறையூர்: தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகும் துறையூர் பேருந்து நிலையவளாகத்தில் கொடிக்கம்பங்கள் அகற்றப்படவில்லை
திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியின் கீழ் வருகிறது ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் என அறிவித்த நிலையில் இரண்டு நாட்களாக தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது இந்நிலையில் துறையூர் பேருந்து நிலையத்தில் உள்ள கட்சி கொடி கம்பங்களில் கட்சி கொடிகள் பறந்து வருகிறது இவற்றை அகற்ற நடவடிக்கை இல்லை என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்