துறையூர்: உப்பிலியபுரத்தில் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து நடிகர் வாகை சந்திரசேகர் தேர்தல் பிரச்சாரம்
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுகவைச் சேர்ந்த நடிகர் வாகை சந்திரசேகர் உப்பிலியபுரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், பொதுமக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அருண் நேருவை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.