துறையூர் அருகே கண்ணனூர் கருப்பு கோவில் பகுதியில் பறக்கும் படை அலுவலர்கள் வாகன ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தின் வந்த வாலிபர்களை சோதனை செய்த போது அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த 77 ஆயிரத்து 950 ரூபாயை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.