விழுப்புரம் அருகே கோர விபத்து: லாரி மோதி 3 கார்கள் அடுத்தடுத்து நொறுங்கின - 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
விழுப்புரம் அருகே ஜானகிபுரம் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. சாலை ஓரமாக சிமெண்ட் ஏற்றிச்செல்லும் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்ததால், கார்கள் மெதுவாக ஒன்றன் பின் ஒன்றாகச் சென்று கொண்டிருந்தன.
அப்போது பின்னால் வந்த லாரி ஓட்டுநரின் தூக்க கலக்கம் காரணமாக, முன்னால் சென்ற காரின் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார்கள் அடுத்தடுத்து மோதி 3 கார்கள் விபத்துக்குள்ளாயின.
அப்பளம் போல் நொறுங்கிய கார்கள்!
இந்த விபத்தில் 2 கார்கள் அப்பளம் போல் முற்றிலும் நொறுங்கி உருக்குலைந்தன. ஆனால், காரில் பயணம் செய்த கரூரைச் சேர்ந்த தமிழ் பிரகாசம், சசிதரன், சாமுவேல் ஆகிய மூவரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுக்கா காவல் நிலைய போலீசார், வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சரிசெய்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#Villupuram #CarAccident #HighwayAccident #TrichyChennaiNH #LiveNews #BreakingNews #RoadSafety #TN32News