விருத்தாசலம்: மாசி மகத்தையொட்டி மணிமுக்தா ஆற்றில் நடைபெற்ற சீரமைப்பு பணியை, அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நேரில் ஆய்வு
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மாசி மகப்பெருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்நிலையில் மணிமுத்தா ஆற்றங்கரையில் மாசி மகத்தான்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக பொதுமக்கள் வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் வரக்கூடும் என்பதை கருத்தில்கொண்டு, நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆற்றில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.