விழுப்புரம் கொய்யா விவசாயிகளுக்கு நேர்ந்த சோகம்! | Guava Farmers Crisis
விழுப்புரம் அருகே பானாம்பட்டு, கோலியனூர், கெங்கராம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கொய்யா மரங்கள், பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன!
வாடல் நோய், ஆந்த்ராக்னோஸ் பூஞ்சாணம் மற்றும் மாவுப்பூச்சித் தாக்குதலால் மரங்கள் காய்ந்து பழங்கள் அழுகுகின்றன.
முன்பு கிலோ ₹40 வரை விற்ற கொய்யா, தற்போது ₹18 முதல் ₹20 வரை மட்டுமே கேட்கப்படுகிறது.
சென்னை கோயம்பேடு போன்ற பெருநகர சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல், இருசக்கர வாகனங்களில் ஊர் ஊராகச் சென்று விற்கும் அவல நிலை.
"4, 5 முறை மருந்து தெளித்தும் பயனில்லை. தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் வந்து கள ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்!"
💧 வியர்வை சிந்தி வளர்த்த மரங்கள்
வெம்பி நிற்பதை யார்காண்பார்?
உழவனின் கண்ணீர்த் துடைக்கக் கைகொடு!
👇 விவசாயிகளின் இந்த நிலையைப் பற்றிய உங்கள் கருத்துக்களைக் கமெண்ட்டில் பதிவிடுங்கள்! இந்தச் செய்தியை அதிகளவில் பகிர்ந்து ஆதரவு தாருங்கள்!
#Viluppuram #GuavaFarmers #AgriNewsTamil #TamilNaduAgriculture #FarmerCrisis #ViluppuramNews #SaveFarmers #GardenCrops #AgriUpdate