திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமி பிரம்மாண்ட ஜோதி தரிசனம்!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த புகழ்பெற்ற திருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் திருக்கோவிலில், ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு நள்ளிரவில் பிரம்மாண்ட ஜோதி தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது!
நேற்று நள்ளிரவு மூலவருக்கு சிறப்புச் சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சரியாக 12 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த தீபத்தில் இருந்து ஜோதி எடுத்து வரப்பட்டு கோவில் கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கொப்பரையில் ஜோதி ஏற்றி வைக்கப்பட்டது.
இந்தக் கண் கொள்ளாக் காட்சியைக் காண தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து 'அரோகரா' கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்!
📍 இடம்: திருவக்கரை, விழுப்புரம் மாவட்டம்.
#Thiruvakkarai #VakrakaliAmman #PournamiJothi #VillupuramNews #Devotional #TempleFestival #TamilNaduTemples #JothiTV #TN32News