ராசிபுரம்: திருச்செங்கோட்டில் பயங்கரம்: மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை முயற்சி
திருச்செங்கோட்டில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர், வெண்ணந்தூர் டாஸ்மாக் அருகே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சந்தேகத்தின் பேரில் இக்கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.