சேலம் மேற்கு: தீபாவளி பண்டிகை: சேலம் ரயில்வே கோட்டத்தில் பாதுகாப்பு தீவிரம்!
தீபாவளியை முன்னிட்டு சேலம், ஈரோடு, தர்மபுரி, ஓசூர், ஜோலார்பேட்டை, காட்பாடி ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. திருட்டு மற்றும் அசம்பாவிதங்களைத் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் உடைமை சோதனையில் ஈடுபட போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.