விழுப்புரத்தில் அரசு செவிலியர்கள் சங்கத்தினர் அதிரடி கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கத்தின் சார்பில், நேற்று மாலை விழுப்புரம் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தின் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரும் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
📌 பணி நிரந்தரம்: MRP ஒப்பந்த செவிலியர்களை உடனடியாக நிரந்தர செவிலியர்களாக தமிழக அரசு பணியமர்த்த வேண்டும்.
📌 புதிய பணியிடங்கள்: புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களிலும் திறன் மேம்பாட்டு செவிலியர் பணியிடங்களை உருவாக்கி, அதில் ஒப்பந்த செவிலியர்களை நியமிக்க வேண்டும்.
📌 ஆரம்ப சுகாதார நிலையங்கள்: கிராமப்புற மருத்துவ சேவை மேம்படவும், மக்களுக்கு இலவச தரமான சிகிச்சை கிடைக்கவும், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தலா 6 செவிலியர்களை பணியமர்த்த வேண்டும்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். சங்கீதா, பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ரேவதி, மகாராணி, கிளாரா, மணிமேகலா, தில்லைக்கரசி, நளினி உள்ளிட்ட ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
#Villupuram #NursesProtest