முசிறி: வேளகாநத்தம் கிராமத்தில் பிரச்சாரத்திற்குச் சென்ற IJK வேட்பாளர் பாரிவேந்தரை ஒரு ஜாதி சங்க நிர்வாகிகள் வழிமறித்து வாக்குவாதம்
பெரம்பலூர் நாடாளுமன்ற IJK வேட்பாளர் பாரிவேந்தர், பாஜக உடன் கூட்டணி அமைத்து தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் முசிறி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேளகாநத்தம் பகுதியில் ஒரு ஜாதி அமைப்பைச் சேர்ந்த வாலிபர்கள் அவரை வழிமறித்தனர். இதுகுறித்து அந்த வாலிபர்கள் கூறுகையில் "கடந்த 25ம் தேதி பாரிவேந்தர் வேட்பு மனு தாக்கல் செய்த போது இரண்டு பேருந்துகளில் ஆட்கள் வந்தனர். ஒரு பேருந்து விபத்துக்குள்ளாகியது தற்சமயம் வரை அவர்களின் உடல்நலம் குறித்தோ அல்லது அவர்களுக்கு எவ்வித மருத்துவ உதவி செய்யாதது ஏன்" என வாக்குவாதம் செய்தனர்.