முசிறி: முசிறி நகராட்சி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து
முசிறி கல்லூரி சாலையில் முசிறி நகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைந்துள்ளது இந்த கிடங்கில் நாள்பட்ட உபயோகப்படுத்தப்படாத குப்பைகள் மலைபோல் குவிந்திருந்தது இந்த குப்பை கிடங்கில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது தீ தடுப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தினர் விரைந்து வந்து தண்ணீர் பீச்சி அடித்து தீ பரவாமல் தடுத்தனர்பின்னர் பொக்லின் மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்கள் உதவியுடன்மேலும் பல வாகனங்களில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றிதீ அணைக்கப்பட்டது