கெங்கவல்லி: தெடாவூரில் சொத்து தகராறில் கத்தியால் குத்தியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு
சேலம் மாவட்டம், தெடாவூரில் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம். அவரது சகோதரர் காசி. இவர்கள் இருவருக்கும் சொத்து தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காசி கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த அருணாச்சலம் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.