மயிலாடுதுறை: தருமபுர கலை கல்லூரியில் நடைபெற்ற ஆதீன மணி விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கினார்
மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் 16ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் அறுபதாம் வயதை முன்னிட்டு மணிவிழா மாநாடு நேற்று துவங்கி பத்தாம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக இன்று மாற்றுத்திறனாளிகள் 150 பேருக்கு செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மணிவிழா சிறப்பு மலர் வெளியிடும் நிகழ்ச்சி இன்று தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரி கலையரங்கில் நடை