வெனிசுலா நாட்டின் மீது தாக்குதல் நடத்தி, அதன் அதிபரை கைது செய்துள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மயிலாடுதுறை வந்திருந்த அக்கட்சியின் மாநில செயலாளர் திரு வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் பொழுது, வெனிசுலா நாட்டின் எண்ணெய் வளத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக அமெரிக்கா ஏகாதிபத்தியம் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி அதிபரை கைது செய்துள்ளது மிகப்பெரும் ஜனநாயக