"சி.வி.சண்முகம் கோயிலில் சத்தியம் செய்ய தயாரா?" - அதிமுக கிளியனூர் ஒன்றிய செயலாளர் ஏ.டி.பக்தவச்சலம் பகிரங்க சவால்!
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கிளியனூர் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய செயலாளர் ஏ.டி.பக்தவச்சலம், சி.வி.சண்முகம் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகிவிடக் கூடாது என்ற துரோக நோக்கத்துடன் சி.வி.சண்முகம் உள்ளிட்ட சிலர் செயல்பட்டுள்ளனர்.
கடந்த தேர்தலில் கழக வேட்பாளர்களை தோற்கடிக்க வேலை செய்த சி.வி.சண்முகம், கட்சிக்கு துரோகம் செய்யவில்லை என்றால் தனது பிள்ளைகளுடன் முருகன் கோயிலுக்கு வந்து சத்தியம் செய்யத் தயாரா?
சுயநலத்துடன் செயல்பட்டு அதிமுக வேட்பாளர்களின் வெற்றியைப் பறித்தவர் சி.வி.சண்முகம்.
தொண்டர்களாகிய நாங்கள் 99% பேர் எடப்பாடியாரின் பின்னால்தான் உறுதியாக நிற்கிறோம்.
#Villupuram #AIADMK #EPS #CVShanmugam #VillupuramNews #BreakingNews #TN32News