நள்ளிரவில் துணிகரம்: மயிலம் அருகே மளிகை கடையின் கூரையை வெட்டி ₹65,000 பணம், சிகரெட் பாக்கெட்டுகள் கொள்ளை!
எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயபாரதி என்பவர் நடத்தி வரும் இந்த மளிகை கடையில், தினமும் வியாபாரப் பணத்தைக் கடையிலேயே வைத்துவிட்டுச் செல்வதை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். நேற்று இரவு கடையின் மேல்புற இரும்புத் தகடினை வெட்டி உள்ளே புகுந்த திருடர்கள், கல்லாப்பெட்டியில் இருந்த ₹65,000 ரொக்கம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளைச் சுருட்டிச் சென்றுள்ளனர்.
காலையில் கடையைத் திறந்தபோது மேற்கூரை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து திண்டிவனம் டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#News32 #MailamNews #Tindivanam #RobberyAlert