அதிமுக உட்கட்சி மோதல் வெடித்தது: விழுப்புரம் செஞ்சியில் நிர்வாகிகள் இடையே பயங்கர அடிதடி! கார் கண்ணாடி உடைப்பு!
அதிமுகவில் உட்கட்சி பூசல் மீண்டும் வெடித்துள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரின் ஆதரவாளர்களுக்கிடையே பயங்கர கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
கூட்டத்தின் போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஒருவரையொருவர் நாற்காலிகளால் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டனர். இந்த மோதலின் உச்சகட்டமாக, புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளரின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவரது காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு பலத்த சேதமடைந்தது.
இந்த பயங்கர மோதலால் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#ADMK #ADMKClash #Villupuram #Gingee #EPS #CVShanmugam #PoliticalNews #TamilNaduPolitics #BreakingNews #News32