வாழப்பாடி: அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் எஸ்.ஐ. மீது தாக்குதல் - ஒருவர் கைது
வாழப்பாடி அருகே அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர், கண்டக்டர் மற்றும் விசாரணைக்கு சென்ற எஸ்.ஐ.யை தாக்கிய வாலிபர்களில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.