பட்டியலின மக்களின் உரிமைகளைப் பறிக்காதே!
தமிழக அரசு 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை'யின் பெயரை 'சமூக நீதித்துறை' என மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, புரட்சி பாரதம் கட்சி சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது.
இந்த பெயர் மாற்றத்தின் காரணமாக, பட்டியலின மக்களின் கல்வி இட ஒதுக்கீடு, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை (Scholarship), மற்றும் தொழில் முனைவோர் திட்டங்கள் போன்ற முக்கிய சலுகைகளிலும், உரிமைகளிலும் பெரும் பாதிப்பு ஏற்படும் என அக்கட்சியினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
புரட்சி பாரதம் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் பூவை.ஆறு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து இந்த கோரிக்கை மனுவை அளித்தனர்.
அரசு இந்த அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், அவ்வாறு பெயர் மாற்றத்தை கைவிடாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
#PuratchiBharatham #Villupuram #SocialJustice
Viluppuram, Viluppuram | Jul 14, 2026