மயிலம் முருகன் கோவிலில் ஆனி மாத கிருத்திகை திருவிழா கோலாகலம்!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த புகழ்பெற்ற மயிலம் மலைமேல் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஊஞ்சல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது!
சிறப்பு அபிஷேகம்: கிருத்திகை தினத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவர் முருகப்பெருமானுக்கு அபிஷேக பொடி, பஞ்சாமிர்தம், பால், சந்தனம், தேன், திருநீறு உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
தங்க கவச அலங்காரம்: மூலவர் சுவாமி தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஊஞ்சல் உற்சவம்: இரவு நேரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, பச்சை பட்டு உடுத்தி வள்ளி தெய்வானையுடன் கொலு மண்டபத்தில் எழுந்தருள, கண்கொள்ளா ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் திருமடத்தினர் இந்த விழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானைத் தரிசித்து அருள் பெற்றனர்!
#MailamMuruganTemple #KrithigaiFestival #MailamTemple #MuruganDevotees #SpiritualNews