விக்கிரவாண்டியில் பரபரப்பு: ₹15,000 லஞ்சம் வாங்கிய VAO! பொதுமக்கள் அதிரடி முற்றுகை!
பட்டா மாற்றம், இறப்புச் சான்றிதழ் போன்ற அரசு சேவைகளுக்கு விண்ணப்பித்த மக்களிடம் ₹2,000 முதல் ₹15,000 வரை இந்த அதிகாரிகள் தொடர்ந்து லஞ்சம் பெற்று வந்துள்ளனர்.
பணத்தை வாங்கிக்கொண்டும் மாதக்கணக்கில் பட்டா வழங்காமல் அலைக்கழித்ததால் ஆத்திரமடைந்த ஒரத்தூர் மற்றும் ஒடுவன்குப்பம் பகுதி பொதுமக்கள் இன்று VAO அலுவலகத்தை அதிரடியாக முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறிய VAO சீனுவாசன், "தனது உதவியாளர் பணம் வாங்கியது தனக்குத் தெரியாது" என்று மழுப்பியதுடன், "வெறும் 7 செண்ட் இடத்திற்கு பட்டா மாற்ற ₹15,000 லஞ்சம் வாங்கப்பட்டது" என்று கேஷுவலாக ஒப்புக்கொண்டது அங்கிருந்தவர்களை மேலும் கொதித்தெழச் செய்துள்ளது!
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியதைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி வட்டாட்சியர் மகாதேவன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து லஞ்சப் புகார் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏழை எளிய மக்களிடம் அரசு சேவைகளுக்கு இப்படி லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!
#Vikravandi #Villupuram #VAO #Bribery Issue #Orathur #Corruption #TamilNaduNews #SocialJustice