கெங்கவல்லி: ஆத்தூர் சாலையில் திமுக தேர்தல் பணிமனையை கிழக்கு மாவட்ட செயலாளர் திறந்து வைத்தார்
கெங்கவல்லி - ஆத்தூர் செல்லும் சாலையில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் பங்கேற்று பணிமனையை திறந்து வைத்தார். இதில், பேரூர் திமுக செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.