
📰 காலில் ஷூ கூட இல்லாமல்... கடும் வெயிலில் விளையாடிய மாணவிகள்! ⚽
விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கில் முதலமைச்சர் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் அரசு பள்ளி மாணவ–மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் நடைபெற்ற மாணவிகளுக்கான கால்பந்து போட்டியில், சில மாணவிகள் காலில் விளையாட்டு காலணி கூட இல்லாமல் கடும் வெயிலில் விளையாடிய காட்சி பார்வையாளர்களை வேதனை அடையச் செய்தது.
🏃♀️ வசதிகள் குறைந்த நிலையிலும் விளையாட்டின் மீதான ஆர்வத்துடன் மாணவிகள் களத்தில் போராடி விளையாடினர். அவர்களின் ஆர்வத்தையும் திறமையையும் பார்த்த பொதுமக்கள், மாணவிகளை பாராட்டி உற்சாகப்படுத்தினர்.
🎯 விளையாட்டில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு விளையாட்டு காலணி என்பது அடிப்படை தேவையாகும். எனவே அரசு பள்ளிகளில் விளையாட்டில் ஆர்வமுள்ள அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் தரமான விளையாட்டு காலணிகளை இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
🤝 அரசு நடவடிக்கை எடுக்கும் வரை சமூக ஆர்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் முன்வந்து மாணவர்களுக்கு விளையாட்டு காலணிகளை வழங்கினால், அது அவர்களின் விளையாட்டு பயணத்திற்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும்.
“திறமை இருக்கிறது... காலில் ஷூ மட்டும் இல்லை!”
மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க அரசு தனிக்கவனம் செலுத்துமா?
📍 விழுப்புரம் | முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி
#TN32NEWS #விழுப்புரம் #முதலமைச்சர்கோப்பை #கால்பந்து #மாணவிகள் #அரசுபள்ளி #விளையாட்டு #Sports #Football #Villupuram #TamilNaduNews