🚨 விழுப்புரம் அருகே பரபரப்பு!
பள்ளி நேரங்களில் கல்குவாரி லாரிகளை இயக்கக்கூடாது!
ஆட்சியர் கார் முன்பு அமர்ந்து பொதுமக்கள் தர்ணா!
விழுப்புரம் அருகேயுள்ள திருவக்கரை – பெரும்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் கல்குவாரிகளில் இருந்து, அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பாதுகாப்பற்ற முறையில் லாரிகள் இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
இதனால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், பள்ளி நேரங்களில் கனரக லாரிகளை இயக்கக் கூடாது என வலியுறுத்தியும் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரின் கார் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
📍 விழுப்புரம்
#விழுப்புரம் #திருவக்கரை #பெரும்பாக்கம் #கல்குவாரி #லாரிகள் #பள்ளிமாணவர்கள் #தர்ணாபோராட்டம் #மாவட்டஆட்சியர் #Villupuram #TN32NEWS