விழுப்புரம் அருகே கல்குவாரி லாரிகளுக்கு எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா!
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள திருவக்கரை – பெரும்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் கல்குவாரிகளில் இருந்து, பள்ளி நேரங்களிலும் பகல் நேரங்களிலும் பாதுகாப்பின்றி கற்களை ஏற்றிச் செல்லும் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் கார் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
🚔 போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், “பள்ளி நேரங்களில் லாரிகள் இயக்கப்படுவதை தடுக்க வேண்டும்; உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
பின்னர் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
📍 வானூர் | திருவக்கரை | பெரும்பாக்கம் | விழுப்புரம்
#விழுப்புரம் #வானூர் #திருவக்கரை #பெரும்பாக்கம் #கல்குவாரி #குவாரிலாரிகள் #பள்ளிமாணவர்கள் #பொதுமக்கள்போராட்டம் #தர்ணா #மாவட்டஆட்சியர் #TN32NEWS #VillupuramNews #Vanur #breakingnewsviral